234 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு
வரவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு திருப்பரங்குன்றம், உதகை, திருப்பூர் வடக்கு உள்ளிட்ட தொகுதிகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு மதுரை தெற்கு, சிங்காநல்லூர், காரைக்குடி, விருகம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், பாஜக மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஹெச். ராஜா உள்ளிட்ட பலரும் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.