பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி!
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பதக்கம் பெறும் நேரத்தில் திடீரென அவரது காலில் விழுந்து வணங்கிய மாணவி, அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழா, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 12-ஆம் பட்டமளிப்பு விழா ஆகும். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் கலந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் கோவையைச் சேர்ந்த சசிகலா என்ற மாணவி எம்.எட். பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
பதக்கம் பெறும்போது மேடையில் திடீரென காலில் விழுந்து ஆசி பெற்ற அவர், அங்கு இருக்கும் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
இதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பெரிய ரோல் மாடல், கடவுள் போன்றவர் எனக் கூறி, அதனால் அவர் காலில் விழுந்து வணங்கியதாகத் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழகத்தில் உயர்வான ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசு நேரடியாக வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். இதனால் மாணவர்கள் இன்னும் அதிக ஆர்வத்துடன் படிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.