காந்தியடிகளின் நினைவு நாள் – தேசிய தலைவர்கள் அஞ்சலி
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் அமைந்துள்ள ராஜ்காட் நினைவிடத்தில் நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் ஒன்று திரண்டு மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 78-வது நினைவு நாள் இன்று இந்தியா முழுவதும் மரியாதையுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வையொட்டி, டெல்லி ராஜ்காட் வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் சமாதி மலர் அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்டது.
அங்கு முதலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளின் தலைமை அதிகாரிகளும் காந்தியடிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வணங்கினர்.