தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணிகளை ‘அவர்லேண்ட்’ என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய தூய்மை பணியாளர்கள், இதற்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த தொடர்ச்சியாக, மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட தூய்மை பணியாளர்கள், அரசு பணியாளர்களாக தங்களை நிரந்தரமாக்க வேண்டும், தொழிற்சங்க நிர்வாகிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.