இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது.
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் முதன்முதலில் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ஆம் ஆண்டு வரை பல கட்டங்களாக நடைபெற்றன.
எனினும், கார்கள் மற்றும் மதுபானங்களின் இறக்குமதி வரி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தொடர்பான தரவு பாதுகாப்பு விதிகள், அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த சூழலில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தற்போது இறுதியாக கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.