மது விற்பனை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அமைச்சர் முத்துசாமி விளக்கம்
தமிழகத்தில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்தவித கூடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:
“ஆண்டுதோறும் மது விற்பனை அளவு அதிகரிப்பது வழக்கமான ஒரு நிலை. அதற்காக அரசு தனியாக முயற்சி எடுப்பதில்லை. மாறாக, மதுக் கடைகளை படிப்படியாக மூடும் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
மேலும் அவர் தொடர்ந்தும் கூறியதாவது:
“ஒவ்வொரு மது பாட்டிலும் வாங்கப்படும் ரூ.10 வைப்புத் தொகை நேரடியாக அரசின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அந்த நிதியை வேறு விதமாக பயன்படுத்த முடியாது. இது நீதிமன்ற உத்தரவுப்படி வசூலிக்கப்படும் தொகை. ஆனால், கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என தவறாக சித்தரிக்கப்படுகிறது,” என்றார்.