சென்னை விமான நிலைய கேண்டீன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் விமான சேவைகளில் தாமதம்
சென்னை விமான நிலையத்தில் உள்ள கேண்டீன் பகுதியின் அருகே ஏற்பட்ட தீ விபத்தால், சர்வதேச விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன.
விமான நிலைய கேண்டீன் அருகில் திடீரென தீப்பற்றியதால், அப்பகுதியில் அடர்ந்த கரும்புகை பரவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், விமான நிலைய தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லவிருந்த அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதுடன், பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.