உறுதியான இந்தியாவை கட்டியெழுப்புவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் மைய நோக்கம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.
நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், புதுச்சேரியில் சுவாமி விவேகானந்தர் மற்றும் அம்பேத்கர் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு, பதஞ்சலி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அண்ணா திடலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் வடதமிழகம் மாநில அமைப்பாளர் பிரஷோபகுமார், வலிமைமிக்க இந்தியாவை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை இலக்கு எனக் கூறினார்.