குடியரசு தினம் – தலைவர்கள் வாழ்த்து
77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்து செய்தியில்,
இந்தியா ஒரு சுதந்திர நாடாக, தனக்கென தனி இறையாண்மை, கோட்பாடு, அரசியல் சட்டம், கொள்கை மற்றும் அரசியலமைப்பை உருவாக்கி, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அமலுக்கு கொண்டு வந்த பெருமைமிக்க நாளே குடியரசு தினம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த 77வது குடியரசு தினத்தில், தமிழகத்தில் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ள கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, NDA கூட்டணியின் குடியாட்சி மலர நாம் அனைவரும் உறுதியுடன் பாடுபட்டு வெற்றி பெறுவோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல். முருகன் தனது குடியரசு தின வாழ்த்து செய்தியில்,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசமான நமது இந்தியத் திருநாட்டில், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட நன்னாளே இன்று என தெரிவித்துள்ளார்.
இந்த இனிய நாளில், நாட்டில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் மேலோங்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கெல்லாம் 77வது குடியரசு தின நல்வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த்