குடியரசு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி நினைவிடத்துக்கு வருகை தந்தார்.
அங்கு அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, பிரதமர் மோடி இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தி, வீரத் தியாகங்களுக்கு மரியாதை செலுத்தினார்.
தேசத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும்,
வீரர்களின் தியாகத்தின் அடிப்படையில் நிலைத்திருக்கிறது.
அவர்களின் நினைவு என்றும் போற்றப்படும்.
77-வது குடியரசு தின வாழ்த்துகள்