சட்டமன்ற தேர்தலில் பிரதான கூட்டணியில் மக்கள் முன்னேற்ற கழகம் – ஜெகநாத் மிஸ்ரா
வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் முன்னேற்ற கழகம் பிரதான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் முன்னேற்ற கழகத்தின் மண்டல மாநாட்டில், கட்சியின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் போது, 55 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய கொள்கை விளக்கப் புத்தகம் வெளியிடப்பட்டது.
மாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா, திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், கட்சியின் பலத்தையும் மக்கள் ஆதரவையும் பிரதிபலிக்கும் வகையில் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கூட்டணி தொடர்பான இறுதி முடிவு பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனக் கூறிய அவர்,
மக்கள் முன்னேற்ற கழகத்தின் மக்கள் நலக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தினார்.
இந்த அறிவிப்பு, மாநில அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது