“விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான்… இரட்டை இலை மக்கள் மனதில் நிரந்தரம்” – சி. விஜயபாஸ்கர்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மக்கள் மனதில் நிரந்தரமாக இருக்கும், விசில் சத்தம் சில காலம் மட்டுமே கேட்கும் என முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக வெளியிட்டுள்ள 5 முதல்கட்ட தேர்தல் அறிக்கையின் துண்டு பிரசுரங்களை புதுக்கோட்டை நகர் பகுதியில் பொதுமக்களிடம் அவர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து அரசியல் கட்சிகளையும் முந்தி, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட 5 முத்தான வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ஆட்சி மாற்றத்திற்கான மக்களின் மனநிலை தற்போது களத்தில் தெளிவாக தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலில் யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளை முன்வைக்கலாம், ஆனால் இறுதி தீர்ப்பை வழங்குவது மக்கள் மட்டுமே எனவும் சி. விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.
இந்த கருத்துகள் தேர்தல் அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.