நாட்டின் 77-வது குடியரசு தின வாழ்த்துகள்
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று பெருமையுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.
இந்த இனிய நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
முப்படை வீரர்களின் அணிவகுப்பும், தமிழக அரசின் பல்வேறு துறைகளை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின விழாவை மேலும் சிறப்பித்தன.
தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், மற்றும் அதிக உற்பத்தித் திறன் பெற்ற விவசாயிகளுக்கான வேளாண் துறை சிறப்பு விருதுகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
விழாவை முன்னிட்டு, மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனநாயகத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இந்த புனித நாளில்,
நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அனைவருக்கும்
77-வது குடியரசு தின வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த்