பாரதியார் தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான வாள் சண்டை போட்டி
பாரதியார் தின விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான வாள் சண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு, தங்களது வாள் சண்டை திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டு வீரர் ஒருவர், வாள் சண்டை போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கிராமப்புற மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.