சட்டமன்றத் தேர்தல்: திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம்

Date:

சட்டமன்றத் தேர்தல்: திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம்

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரி பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் அறிவிப்பு நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதன் சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகமாக உள்ளதாக கருதப்படும் 12 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் கோவை தெற்கு, சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், டார்ச் லைட் சின்னத்தில்தான் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தெளிவாக இருப்பதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத் தேர்தல் 2026: ‘இந்து பரிவார்’ கோட்பாட்டுடன் களமிறங்கும் இந்து மகாசபா

தமிழகத் தேர்தல் 2026: 'இந்து பரிவார்' கோட்பாட்டுடன் களமிறங்கும் இந்து மகாசபா ​தமிழக...

காரைக்குடி கோவிலூர் சர்ச்சை: அரசியல்வாதிகளின் மௌனமும் பாஜக-வின் தேவையும்

காரைக்குடி கோவிலூர் சர்ச்சை: அரசியல்வாதிகளின் மௌனமும் பாஜக-வின் தேவையும் ​சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

தலைநகரில் பயங்கரம்: திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

தலைநகரில் பயங்கரம்: திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை...

இயற்கையோடு கலந்த ‘டேவிட் பாய்’: உத்தராகண்டில் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு!

இயற்கையோடு கலந்த 'டேவிட் பாய்': உத்தராகண்டில் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு! இங்கிலாந்தில் பிறந்து...