திருநீர்மலை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்
செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து டயர் வெடித்ததால் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னை நோக்கி 20 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து, திருநீர்மலை அருகே வந்தபோது முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.
விபத்தைக் கண்ட அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு, பேருந்தில் இருந்த பயணிகளை சிறுகாயங்களுடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ததுடன், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.