நவம்பர் 7-ம் தேதி மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் – வைகோ அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் செயல்பட்டு வரும் மறுமலர்ச்சி திமுக (மதிமுக), 2026 தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடர உள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சில நாட்களாக உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்திருந்தார். தற்போது அவரின் உடல்நிலை சீராகியுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க நவம்பர் 7-ம் தேதி மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில்,
“மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜுன் ராஜ் தலைமையில் நவம்பர் 7-ம் தேதி காலை 10 மணிக்கு, தலைமை அலுவலகமான தாயகம் வளாகத்தில் நடைபெறும்,”
என்று தெரிவித்துள்ளார்.