மதுராந்தகம் பொதுக்கூட்டம் NDA வெற்றிக்கான அடித்தளம் – ஜி.கே.வாசன் நம்பிக்கை
மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம், அந்தக் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஈச்சனாரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வலுவான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உறுதியான ஆட்சி நடைபெற்று வருவதாகக் கூறினார்.
மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் திமுக அரசை அகற்றும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்துள்ளதாகவும், தற்போதைய திமுக அரசு தமிழ் மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கத் தவறியுள்ளதாகவும் ஜி.கே.வாசன் விமர்சித்தார்.