தேசிய ஜனநாயக கூட்டணி தமிழர் நலனைக் காக்கும் வலுவான அமைப்பு – நயினார் நாகேந்திரன்
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தமிழர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் கூட்டணி எனக் கூறினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தந்த பின், “சூரியன் மறைந்துவிட்டது” என விமர்சனமாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், தமிழக அரசியலில் மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
அதோடு, வரவிருக்கும் காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக நிகழும் என்றும் அவர் நம்பிக்கையுடன் பேசினார்