தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் திரண்ட பெருந்திரள் – மக்கள் பேரலையில் திளைத்த மதுராந்தகம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, மதுராந்தகம் நகரம் முழுவதும் உற்சாகமும் கொண்டாட்டமும் நிரம்பிய சூழலாக மாறியது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் பெருந்தொகையாக திரண்டனர். நகரின் அனைத்து வழித்தடங்களிலும் வரிசை வரிசையாக வந்த தொண்டர்கள் காரணமாக, மதுராந்தகம் ஒரு கட்டத்தில் முழுமையாக இயக்கமின்றி நின்றது. தொண்டர்களின் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியால், நகரம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்ட தோற்றம் பெற்றது.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
கூட்டம் நிறைவடைந்த பிறகு, தொண்டர்கள் அனைவரும் ஒழுங்காக நாற்காலிகளை அடுக்கி வைத்துவிட்டு, அமைதியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.