நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன் – அண்ணாமலை கருத்து
நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன், இன்று மெல்ல மறையத் தொடங்கியுள்ளது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெரும் அரசியல் மாற்றத்துக்கான அடையாளமாக அமைந்த இந்தப் பொதுக்கூட்டம், இயற்கையே சாட்சியாக நடைபெற்ற ஒரு அபூர்வ நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில், தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், திமுகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், ஒரு தீய சக்தியுடன் சேர்ந்து மேலும் ஒரு தீய சக்தியை உருவாக்கும் வாக்காக மாறும் என கடுமையாக விமர்சித்தார்.