தமிழகத்திற்கு வந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
கன்யாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தை வந்தடைந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் வழியாக இயக்கப்படும் மூன்று அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த ரயில் தமிழக எல்லைக்குள் அமைந்துள்ள குழித்துறை ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அங்கு முன்கூட்டியே திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் ரயிலை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், ரயிலை இயக்கிய ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய அவர்கள், இந்த தருணத்தை கொண்டாடும் வகையில் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.