சுதந்திரப் போராட்ட வீரர்களை அதிகமாக வழங்கிய மாநிலம் தமிழகம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியாவின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை மிக அதிகமாக அளித்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர் என பெருமையுடன் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் போராடிய வீரர்களின் விவரங்களை தொகுத்து உலகறியச் செய்ய வேண்டும் என்றும்,
அவர்களுக்குத் தேவையான அங்கீகாரமும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்குடன், தேச சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து, அவர்களின் தியாகங்களுக்கு நாம் அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.