வரவிருக்கும் தேர்தல் சவாலானதாக இருக்கும்! – தொண்டர்களுக்கு கார்த்தி சிதம்பரம் அனுப்பிய குரல் பதிவு
முன்னால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் எளிதானதாக இருக்காது, அதனால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை தொகுதி எம்பியான கார்த்தி சிதம்பரம் வெளியிடும் கருத்துகள், அடிக்கடி தமிழக அரசியல் சூழலில் விவாதங்களை கிளப்பும். அந்த வரிசையில், நேற்று நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னம் ஒதுக்கியது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு அவர் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அந்த குரல் பதிவில்,
“விஜயின் கட்சிக்கு விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. என் பார்வையில் அது ஒரு வலுவான சின்னம். இந்த தேர்தல் நீங்கள் நினைப்பதைப் போல சுலபமாக இருக்காது; கடுமையான போட்டியாகவே அமையும்.
உங்கள் பகுதிகளில் மக்கள் எந்த கூட்டணியைப் பற்றி அதிகமாக பேசுகிறார்கள் என்பதை கவனித்து எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அவ்வப்போது கள நிலவரத்தை வாய்ஸ் மெசேஜ் மூலம் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.