ஊழலில் மூழ்கிய திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்தது – பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுகளால் சிக்கிய திமுக அரசுக்கு முடிவு கட்டும் தருணம் நெருங்கிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதுராந்தகத்தில் நடைபெற உள்ள முக்கிய அரசியல் கூட்டத்தில், கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களுடன் இணைந்து பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு விடை அளிக்க வேண்டுமென்ற முடிவை தமிழ்நாடு மக்கள் தெளிவாக எடுத்துவிட்டனர் என கூறிய பிரதமர்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி கால சாதனைகளும், அர்ப்பணிப்பு மனப்பான்மையும் தமிழக மக்களின் மனதில் ஆழமான நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.