பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் திரள வேண்டும் – எச். ராஜா
மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது ஐந்து லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவரும் நடிகருமான எச். ராஜா தெரிவித்தார்.
இந்த இலக்கு குறித்து எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து அந்த சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பான முடிவுகளை பாஜக தேசிய தலைமை மற்றும் இபிஎஸ் இணைந்து எடுப்பார்கள் என்றும் எச். ராஜா விளக்கினார்.