வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் உலாவிய ஒற்றை யானை – பொதுமக்கள் பீதி
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள பகுதியில், காட்டிலிருந்து வெளியே வந்த ஒற்றை யானை பொதுமக்களை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குரங்குமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் சிலர் பேருந்துக்காக காத்திருந்தனர். அந்த நேரத்தில், அருகில் காட்டு யானை சுதந்திரமாக நடமாடியது. இதை கண்ட அங்கிருந்தவர்கள், தங்களது செல்போன்களில் அந்தக் காட்சிகளை பதிவு செய்தனர்.
அச்சமயம், யானை திடீரென மக்களை நோக்கி பாய்ந்து துரத்தியதால், அங்கிருந்தவர்கள் உயிர் பீதியில் சிதறி ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.