தேவையற்ற பகுதியில் கோடிக்கணக்கில் பேருந்து நிறுத்தம் அமைப்பு – பொதுமக்கள் அதிருப்தி
பூந்தமல்லி அருகே, பயணிகள் வருகை மிகக் குறைவான பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பூந்தமல்லியை ஒட்டியுள்ள குத்தம்பாக்கம் பகுதியில், பரந்த அளவில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக பூந்தமல்லியில் செயல்பட்டு வந்த போக்குவரத்து பணிமனை, கோயம்பேட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், இப்பகுதியில் பயணிகள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது.
இந்தச் சூழலில், பயணிகள் தேவையில்லாத இடத்தில் பல லட்சம் ரூபாய் அரசு நிதியை செலவிட்டு பேருந்து நிறுத்தம் அமைப்பது முறையல்ல என்றும், இது பொதுப் பணத்தை வீணாக்கும் செயலாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.