உதயநிதியின் தேசத்திற்கு எதிரான பேச்சை கடுமையாக கண்டிக்கிறோம் – பியூஷ் கோயல்
தமிழ்நாடு துணை முதல்வர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலினை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான கருத்துகளை தங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், அதனை தீவிரமாக எதிர்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் உதயநிதி பேசிய வெறுப்புமிகு உரைக்கு எதிராக உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற செயல்கள் காரணமாக, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவியில் தொடர தகுதியற்றவர் என்றும், அந்த பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சமூகங்களில் பிளவை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததற்காக உதயநிதி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.