கோதையாற்றில் முதலை தோற்றம் – அச்சத்தில் மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாற்றில் முதலை ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்திலேயே கோதையாற்றில் முதலை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் சென்றது. இதையடுத்து, ட்ரோன்கள் உதவியுடன் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முதலை அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், நடக்கல் பகுதியை ஒட்டிய கோதையாற்றில் முதலை தென்பட்டதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த மக்கள் அதை செல்போனில் பதிவு செய்து வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காரணமாக, முதலைக்கான அபாயம் அதிகரிக்கும் முன் அதை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.