ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பாதீர்கள் – பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது சரியான காலகட்டத்தில் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக தேவையற்ற செய்திகள் மற்றும் ஊகங்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய நிலவரப்படி கூட்டணி குறித்து எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக எந்தக் கட்சியினருடனும் தொலைபேசி வழியாக கூட பேசப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தேமுதிக கூட்டணி குறித்து வெளியாகும் தகவல்கள் முழுமையாக உண்மையற்றவை; ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்றும் அவர் கூறினார்.
எனவே, தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.