விரதம் கடைப்பிடிப்பதால் உடலின் பாதுகாப்புத் திறன் அதிகரித்து, புற்றுநோய் உள்ளிட்ட சேதமடைந்த செல்களை எதிர்க்கும் செயல்முறை தொடங்குகிறது
விரதம் மேற்கொள்ளும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற்று, பாதிக்கப்பட்ட செல்கள் மற்றும் புற்றுநோய் சார்ந்த செல்களை இயற்கையாக அழிக்கும் செயல்பாடு ஆரம்பமாகும் என்று அப்போலோ ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இடுப்பு எலும்பில் ரத்த ஓட்டம் குறைவதால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்தியுள்ளதாக அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சிகிச்சை அனுபவம் குறித்து அப்போலோ ஆயுர்வேத மருத்துவமனையின் துணை தலைமை மருத்துவர் அஜித் குமார் விவேகானந்தன் மற்றும் மருத்துவர் ஸ்மிதா ஜயதேவ் ஆகியோர் விரிவாக விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை முன்வைத்த கருத்தைப் போல், விரதம் புற்றுநோய் செல்களை அழிக்குமா என்ற கேள்வி அஜித் குமார் விவேகானந்தனிடம் எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், விரதம் கடைப்பிடிக்கும்போது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தூண்டப்பட்டு, சேதமடைந்த செல்கள் மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்கும் செயல்பாடு துவங்குகிறது என்றும், இது அறிவியல் அடிப்படையிலான உண்மை என்றும் விளக்கினார்