இந்தியாவை தனியாக குறிவைத்து அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை
இந்தியாவை மட்டும் நோக்கி அமெரிக்கா தடைகள் விதிப்பது முறையல்ல என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் பேசுகையில், உக்ரைன்–ரஷ்யா போர் தொடர்பாக இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டை ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்தியுள்ளதாக கூறினார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், இந்தியாவை மட்டும் இலக்காக வைத்து அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் நடவடிக்கைகள் எடுப்பது நியாயமற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு முழு உரிமை இருப்பதாகவும், அதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.