ஆற்றுத் திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு – ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், விழா நிறைவடைந்து பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், பலூன் நிரப்ப பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காயமடைந்த 6 பேர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.