அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸுக்கு பாஜக மற்றும் மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு
கும்பகோணம் வழித்தடமாக மேற்குவங்க மாநிலத்தின் நியூ ஜல்பைகுரி நோக்கி இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.
நாகர்கோவிலில் இருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய நகரங்களை கடந்து மேற்குவங்க மாநிலத்தை அடைகிறது.
இந்த நிலையில், ஜல்பைகுரியில் இருந்து கும்பகோணத்தை வந்தடைந்த அம்ரித் பாரத் ரயிலை பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் ரயிலை இயக்கிய ஓட்டுநருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்