திருப்பரங்குன்றம் சம்பவத்தை முன்வைத்து நிதின் நபின் உரை
ராமர் பாலத்தின் வரலாற்றுச் சான்றுகளை நிராகரிப்பவர்களும், கார்த்திகை தீபம் போன்ற பாரம்பரிய விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் இந்திய அரசியல் வெளியில் இடம்பெறக் கூடாது என்பதை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மிக நிகழ்வுகளை தடை செய்யும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தை குறிப்பிட்ட நிதின் நபின், அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு நீதிபதியை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் முயன்றதாக கூறினார்.
ராமர் பாலம் இல்லை என வாதிடுவோரும், கார்த்திகை தீப திருவிழாவை எதிர்ப்போரும் இந்திய அரசியலில் இடம் பெறக் கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வரவுள்ள தேர்தல்களில் பாஜக தொண்டர்கள் தீவிரமாக உழைத்து கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.