பேரவையில் ஆளுநர் உரை நடைமுறையை ரத்து செய்ய நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கும் மரபை நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுகுறித்து உரையாற்றிய அவர், நூற்றாண்டுகளாக நிலைத்து வந்த மரபும் ஜனநாயகப் பாரம்பரியமும் கொண்ட சட்டமன்றத்தை ஆளுநர் தொடர்ந்து அவமதித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
ஆளுநர் பதவி என்பது மாநிலத்தின் நலனையும், மக்களின் உணர்வுகளையும் மதித்து செயல்பட வேண்டிய பொறுப்பான பொறுப்பு என வலியுறுத்திய முதல்வர், அரசின் உரை ஆளுநரால் வாசிக்கப்பட்டதாக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை முழுமையாக விலக்கும் வகையில் தேவையான சட்ட மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபட கூறினார்.