CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” – விழிப்புணர்வு பாடல் வெளியீடு

Date:

“CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” – விழிப்புணர்வு பாடல் வெளியீடு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை ஒட்டிய பகுதியில், தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” தொடர்பான விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த CISF தென்மண்டல தலைமை ஆய்வாளர் (IG) சரவணன், வருகிற 28ஆம் தேதி டெல்லியில் அமைந்துள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் இருந்து, இந்த கடலோர சைக்கிள் பயணம் காணொலி வழியாக தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்தப் பயணத்தில், கடற்கரைப் பகுதிகளைக் கடந்து மொத்தம் 6,553 கிலோமீட்டர் தூரம் 130 வீரர்கள் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், 25 நாட்கள் நீடிக்கும் இந்த முயற்சியில் 11 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

மேலும், 52 கடலோர கிராமங்கள் வழியாக பயணம் செய்யும் போது, அந்தந்த பகுதிகளில் தங்கி பொதுமக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை வீரர்கள் கேட்டறிவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சபையிலிருந்து ஆளுநர் வெளியேறியதன் பின்னணி என்ன? – ஆளுநர் மாளிகை விளக்கம்

சபையிலிருந்து ஆளுநர் வெளியேறியதன் பின்னணி என்ன? – ஆளுநர் மாளிகை விளக்கம் சட்டப்பேரவையில்...

விஜய் குறித்து தவறான தகவல்கள் பரப்பு – திமுக ஆதரவு ஊடகங்களுக்கு தவெக குற்றச்சாட்டு

விஜய் குறித்து தவறான தகவல்கள் பரப்பு – திமுக ஆதரவு ஊடகங்களுக்கு...

பிப்ரவரி 7 முதல் பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

பிப்ரவரி 7 முதல் பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை – புதுச்சேரி முதல்வர்...

என்டிஏ கூட்டணியுடன் தேர்தலில் களமிறங்க விருப்பம் – பாரிவேந்தர் அறிவிப்பு

என்டிஏ கூட்டணியுடன் தேர்தலில் களமிறங்க விருப்பம் – பாரிவேந்தர் அறிவிப்பு இந்திய ஜனநாயக...