விஜய் குறித்து தவறான தகவல்கள் பரப்பு – திமுக ஆதரவு ஊடகங்களுக்கு தவெக குற்றச்சாட்டு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, தவெக மற்றும் அதன் தலைவர் விஜயை குறிவைத்து உண்மையற்ற செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக, அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான விளக்கங்களையும் ஆவணங்களையும் விஜய் ஏற்கனவே வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அடுத்த கட்ட விசாரணைக்காக விஜயை நேரில் ஆஜராகுமாறு எந்த சம்மனும் வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.
இதனிடையே, திமுக சார்ந்த சில ஊடகங்கள் தவெக கட்சிக்கும் விஜய்க்கும் எதிராக அவதூறான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும், குறிப்பாக குற்றப்பத்திரிகையில் விஜயின் பெயர் சேர்க்கப்படும் என்ற அடிப்படையற்ற தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.