சிவகங்கை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு: 70-க்கும் அதிகமானோர் காயம்
சிவகங்கை மாவட்டத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்வில், எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களும் இணைந்து விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். புனித அந்தோணியார் ஆலயத்தில் மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து, பாரம்பரிய முறையில் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
பண்டிகை நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில், ஐந்நூற்றுக்கும் அதிகமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
போட்டியின் போது சீறிப்பாய்ந்த காளைகள் பலரை தாக்கியதில், 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள். இதில், கடுமையான நிலையில் இருந்த 15-க்கும் அதிகமானவர்கள் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.