பெங்களூரு உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சீட்டு முறையில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீர்மானம்
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தாமல், பாரம்பரிய வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த முடிவு மாநில தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், வரும் மே 25ஆம் தேதி நடைபெற உள்ள பெங்களூரு உள்ளாட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.