80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்பு இன்னும் அமல்படுத்தப்படவில்லை
தமிழகத்தில் புதிதாக 80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று 2024ல் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்திருந்தார். ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டாகியும் இது நடைமுறைக்கு வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை விரிவாக்கி 80,000 பேருக்கு கூட ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பு குறிப்பிட்டது.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. அதேசமயம், கடந்த நான்கு ஆண்டுகளில் 16,684 ஓய்வூதியதாரர்களின் பெயர்கள் அரசு நீக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி, புதிதாக 80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.