தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் ஏற்பாட்டில் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சி
தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் சார்பில், “தமிழும் பாரதியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் நடைபெற்றது.
தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மகாகவி பாரதியாரின் சந்ததியரான நிரஞ்சன் பாரதி, பாஜக மாநில துணைத் தலைவர் மா.வெங்கடேசன், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் பழ.கருப்பையா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் உரையாற்றிய மா.வெங்கடேசன், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழ்மொழியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் வாசிப்பதில் சிரமம் அனுபவிப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நிரஞ்சன் பாரதி, ஒருகாலத்தில் அரசர்களின் மொழியாக இருந்த தமிழை பொதுமக்களின் மொழியாக மாற்றிய பெருமை மகாகவி பாரதியாருக்கே உரியது என குறிப்பிட்டார். மேலும், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடல் குறித்து ஆதாரமற்ற கருத்துகள் பரப்பப்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.