பிரதமரின் தமிழக வருகை தேர்தல் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியான ஒன்றாக மாறியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மனதை கவரும் வகையில் இருப்பதாகக் கூறினார். நடைமுறையில் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகப் பயணம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என்றும், அந்தப் பயணத்தின் போது மேலும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் என்டிஏ கூட்டணியில் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
மேலும், மகாராஷ்டிரா மற்றும் திருவனந்தபுரத்தில் பெற்ற வெற்றிகளின் அரசியல் தாக்கம் தமிழகத்திலும் பிரதிபலிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.