படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் – பிரதமர் மோடி தொடக்கம்
படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில்சேவையை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து கவுகாத்தி நோக்கி இயக்கப்பட உள்ள இந்த அதிவேக ரயிலுக்கு பிரதமர் மோடி கொடியசைத்து புறப்பாடு அளித்தார். தொடக்க நிகழ்வின் போது அவர் ரயிலில் பயணம் செய்து, அதில் இருந்த மாணவர்களுடன் உரையாடினார்.
இந்த புதிய ரயில் சேவை மூலம், ஹவுரா–கவுகாத்தி இடையிலான பயண நேரம் சுமார் இரண்டரை மணி நேரம் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பெறும் வசதிகள் விமானப் பயண அனுபவத்துக்கு இணையானதாக இருக்கும் என்றும், நீண்ட தூரப் பயணங்களை மேலும் பாதுகாப்பாகவும், வேகமாகவும் மாற்றும் வகையில் இந்த ரயில் சேவை அமைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.