பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பிறந்தநாள் – பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வாழ்த்து
பாரத ரத்னா விருது பெற்ற தமிழ்த் தலைவர் திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் பிறந்தநாளான இந்நாளில், அவருக்கு என் ஆழ்ந்த வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தொடங்கி அரசியல் வரை நீண்ட அவரது பயணம், சாதனைகளாலும் மக்கள் நல சேவைகளாலும் நிறைந்த ஒரு வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது. தொலைநோக்கு பார்வை, மனிதநேய உணர்வு மற்றும் மக்கள் மீது கொண்ட அக்கறை ஆகியவை அவரது தலைமையினை தனித்துவமாக உயர்த்தின.
தமிழ் மரபு, பண்பாடு மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நேசமும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்த தன்னலமற்ற பங்களிப்பும் இன்றும் மக்களின் நினைவுகளில் மதிப்புடன் நிலைத்து நிற்கின்றன.
நேர்மை, இலட்சியம் மற்றும் சமூகப் பொறுப்புடன் செயல்பட விரும்பும் இளைய தலைமுறைக்கு, எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக திகழ்கிறது.