களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை – மணப்பாறை அருகே திருவிழா கோலம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள பகுதிகளில், ஞானவேல் முருகன் ரத யாத்திரை உற்சாகமான ஆட்டம், பாட்டங்களுடன் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராமத்தில் 36-வது ஆண்டாக முருகன் ரத யாத்திரை சிறப்பாக நடத்தப்பட்டது.
அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஞானவேல் முருகன் எழுந்தருளிய நிலையில், பக்தர்களின் இசை, நடனம், முழக்கங்களுடன் ரத யாத்திரை தொடங்கியது.
இந்த ஆன்மிக ஊர்வலத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
விழா அமைதியாக நடைபெறுவதற்காக 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.