குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள்!
பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப சுவாமி பக்தர்களும் பெருமளவில் திரண்டனர்.
கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அருவிகளில் குளிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொங்கல் விடுமுறை நாட்களில் குற்றாலம் பகுதி மக்களால் நிரம்பி, பல நாட்களுக்கு பிறகு அருவிக்கரை மீண்டும் உயிர்ப்புடன் களைகட்டியது.