டாப்சிலிப் வனப்பகுதியில் உற்சாகமாக நடைபெற்ற யானைப் பொங்கல் விழா
கோவை அருகே அமைந்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியிலுள்ள யானைகள் பராமரிப்பு முகாமில், யானைப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் யானைகளுக்கான பாரம்பரிய பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, பாகன்கள் யானைகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்து அருகிலுள்ள விநாயகர் ஆலயத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு, பழங்குடியின மக்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் இணைந்து புதிய மண் பானையில் பொங்கல் தயாரித்து யானைகளுக்கு படைத்தனர்.
இந்த யானைப் பொங்கல் நிகழ்ச்சியை நேரில் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் யானைகளுடன் அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியடைந்தனர்.