வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பசு ஓட்டம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில், மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமான பசு ஓட்ட நிகழ்ச்சி வழக்கம்போல் நடைபெற்றது.
மாட்டுப் பொங்கல் தினமான இன்று, கோயில் முன்பாக அமைக்கப்பட்ட தொழுவத்தில் 400-க்கும் அதிகமான மாடுகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து, கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோயில் காளைகளுக்கு பூஜை செய்யப்பட்டது.
பின்னர், மஞ்சு விரட்டு நிகழ்ச்சியுடன் பசு ஓட்டம் தொடங்கப்பட்டது. வாசுதேவநல்லூரில் நடைபெற்ற இந்த பசு ஓட்டத்தில், மாரிச்சாமி என்பவரின் மாடு முதலிடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மரியாதை மற்றும் பாராட்டு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு உற்சாகமாகக் கொண்டாடினர்.